யுரேகா ஃபோர்ப்ஸ் லிமிடெட் (EFL)தனியுரிமைக் கொள்கை

 

நடைமுறைக்கு வரும் தேதி: 31-12-2025


யுரேகா ஃபோர்ப்ஸ் லிமிடெட் ("EFL," "நாங்கள்," எங்கள் அல்லது "நமக்கு") நிறுவனத்தில் எங்கள் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் எங்கள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் இணையதளத்துடன் தொடர்பு கொள்ளும் அனைத்து தனிநபர்களின் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.இந்தத் தனியுரிமைக் கொள்கை டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 ("DPDP சட்டம்") மற்றும் அதன் தொடர்புடைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம், சேமிக்கிறோம், வெளிப்படுத்துகிறோம் மற்றும் பாதுகாக்கிறோம் என்பதை விவரிக்கிறது.
 

1. வரையறைகள்
 

a) தனிப்பட்ட தரவு: அத்தகைய தரவுகளின் மூலம் அல்லது அது தொடர்பாக அடையாளம் காணக்கூடிய ஒரு தனிநபர் பற்றிய எந்த தரவுகளும்.
b) தரவு உரிமையாளர்: தனிப்பட்ட தரவுகளுக்குச் சொந்தமானவர்.
c) தரவுப் பொறுப்பாளர்: தனிப்பட்ட முறையில் அல்லது மற்றவர்களுடன்  இணைந்து, தனிப்பட்ட தரவுகளைச் செயலாக்குவதற்கான நோக்கம் மற்றும் வழிமுறைகளைத் தீர்மானிப்பவர்கள் எவரும் (இந்தக் கொள்கையில், EFLதான் தரவுப் பொறுப்பாளர்).
d) தரவுச் செயலி: தரவுப் பொறுப்பாளரின் சார்பாகத் தனிப்பட்ட தரவுகளைச் செயலாக்குபவர்கள் எவரும்.
e) செயலாக்கம்: சேகரிப்பு, பதிவு செய்தல், ஒழுங்கமைத்தல், கட்டமைத்தல், சேமிப்பு, தகவமைத்தல், மாற்றம், மீட்டெடுப்பு, ஆலோசனை, பயன்பாடு, பரிமாற்றம், பரப்புதல் மூலம் வெளிப்படுத்துதல் அல்லது வேறுவிதமாக கிடைக்கச் செய்தல், சீரமைப்பு அல்லது சேர்க்கை, கட்டுப்பாடு, அழித்தல் அல்லது சிதைத்தல் போன்ற வழிமுறைகளில் தனிப்பட்ட தரவுகளில் செய்யப்படும் எந்தவொரு செயல்பாடும் அல்லது செயல்பாடுகளின் தொகுப்புகளும், தானியங்கு முறையில் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்.
f) ஒப்புதல்: குறிப்பிட்ட நோக்கத்திற்காக அவர்களின் தனிப்பட்ட தரவுகளைச் செயலாக்குவதற்கான ஒப்பந்தத்தைக் குறிக்கும் எந்தவொரு நிபந்தனையற்ற, தெளிவான உறுதிமொழியும் மற்றும் உறுதியான நடவடிக்கைகளும்  
 

2. தரவு செயலாக்கத்தின் கொள்கைகள்
 

தனிப்பட்ட தரவுகளைச் செயலாக்கும்போது EFL பின்வரும் கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறது:
 

a) சட்டப்பூர்வத்தன்மை, நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மை: தனிப்பட்ட தரவுகள் சட்டப்பூர்வமாகவும், நியாயமாகவும், வெளிப்படையான முறையிலும் செயலாக்கப்படுகின்றன.
b) நோக்க வரம்பு: தனிப்பட்ட தரவுகள் குறிப்பிடப்பட்ட, தெளிவான மற்றும் சட்டப்பூர்வமான நோக்கங்களுக்காகவே சேகரிக்கப்படுகின்றன மற்றும் அந்த நோக்கங்களுடன் பொருந்தாத வகையில் அவை மேலும் செயலாக்கப்படாது.
c) தரவுக் குறைப்பு: சேகரிக்கப்படும் தனிப்பட்ட தரவுகள் அவை செயலாக்கப்படும் நோக்கங்களுக்குத் தொடர்புடையதாகவும், போதுமானதாகவும், அவசியமானவற்றுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டதாகவும் இருக்கும்.
d) துல்லியம்: தனிப்பட்ட தரவு துல்லியமாகவும், தேவைப்படும் இடங்களில் புதுப்பிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
e) சேமிப்பக வரம்பு: தனிப்பட்ட தரவுகள் செயலாக்கப்படும் நோக்கங்களுக்காகத் தேவைப்படும் காலத்தை விட அதிக காலம்  தரவு உரிமையாளர்களை அடையாளம் காணக்கூடிய வடிவத்தில் தனிப்பட்ட தரவுகள் சேமித்து வைக்கப்படாது.
f) ஒருமைப்பாடு மற்றும் இரகசியத்தன்மை: தனிப்பட்ட தரவுகளுக்குப் பொருத்தமான பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், பொருத்தமான தொழில்நுட்ப அல்லது நிறுவன ரீதியான நடவடிக்கைகளைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத அல்லது சட்டவிரோதமான செயலாக்கத்திற்கும் தற்செயலான இழப்பு, அழிவு அல்லது சேதத்திற்கும் எதிராகப் பாதுகாப்பு அளிப்பது உட்பட, தனிப்பட்ட தரவுகள் செயலாக்கப்படுகின்றன.
 

3. நாங்கள் என்ன தனிப்பட்ட தரவுகளைச் சேகரிக்கிறோம்?
 

நாங்கள் பின்வருபவை உட்பட ஆனால் இவைகள் மட்டுமே அல்லாமல் பல்வேறு வகையான தனிப்பட்ட தரவுகளைச் சேகரிக்கலாம்:
 

a) தொடர்புத் தகவல்கள்: பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்.
b) புள்ளிவிவரத் தகவல்கள்: வயது, பாலினம், பிறந்த தேதி.
c) நிதித் தகவல்கள்: கட்டண விவரங்கள், வங்கிக் கணக்கு, பணப்பைத் தகவல்கள் (பரிவர்த்தனைகளுக்காக).
d) அடையாளத் தகவல்கள்: சட்டப்படி தேவைப்படும் இடங்களில் அல்லது குறிப்பிட்ட சேவைகளுக்காக, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் (உதாரணமாக, ஆதார், பான், பாஸ்போர்ட்).
e) சேவைப் பயன்பாட்டுத் தரவு: இணையதள உலாவல் வரலாறு, ஐபி முகவரி, சாதனத் தகவல்கள் மற்றும் இருப்பிடத் தரவு உட்பட, எங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய தகவல்கள்.
f) வாடிக்கையாளர் சேவைத் தொடர்புகள்: எங்கள் வாடிக்கையாளர் ஆதரவாளர்களுடனான தகவல்தொடர்புகளின் பதிவுகள்.
g) வேலைவாய்ப்பு தொடர்பான தரவுகள்: பணியாளர்களுக்கு, இதில் வேலைவாய்ப்பு வரலாறு, தகுதிகள், செயல்திறன் மதிப்பீடுகள் மற்றும் பிற மனிதவளத் துறை தொடர்பான தரவுகள் ஆகியவை அடங்கும்.
h) சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பு விருப்பத்தேர்வுகள்: எங்களிடமிருந்து சந்தைப்படுத்தல் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கான உங்கள் விருப்பத்தேர்வுகள்.
 

4. உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம்?
 

நாங்கள் பின்வரும் பல்வேறு வழிகள் மூலம் தனிப்பட்ட தரவுகளைச் சேகரிக்கிறோம்:
 

a) உங்களிடமிருந்து நேரடியாக: நீங்கள் எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை வாங்கும்போது, எங்கள் இணையதளத்தில் பதிவு செய்யும்போது, படிவங்களை நிரப்பும்போது, ஆய்வுகளில் பங்கேற்கும்போது அல்லது எங்கள் வாடிக்கையாளர் சேவையுடன் தொடர்பு கொள்ளும்போது.
b) எங்கள் இணையதளம் மற்றும் மொபைல் செயலிகள் வழியாக: குக்கீகள், வெப் பீக்கன்கள் மற்றும் பிற கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் முலம்
c) மூன்றாம் தரப்பு ஆதரங்களிலிருந்து: உங்கள் ஒப்புதலுடன், அல்லது சட்டப்படி அனுமதிக்கப்பட்டால், கூட்டாளிகள், பொதுத் தரவுத்தளங்கள் அல்லது சமூக ஊடகத் தளங்களிலிருந்து.
d) எங்கள் பணியாளர்கள் மற்றும் முகவர்கள் வழியாக: சேவை வருகைகள், விற்பனைத் தொடர்புகள் அல்லது பிற நேரடி ஈடுபாடுகளின் போது.
 

5. உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?
 

உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் பின்வரும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறோம்:
 

a) எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க நிர்வகிக்க: இதில் ஆர்டர் நிறைவேற்றுதல், டெலிவரி, இன்ஸ்டலேஷன், பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவை அடங்கும்.
b) பணம் செலுத்துதல்களைச் செயல்படுத்தவும் கணக்குகளை நிர்வகிக்கவும்.
c) உங்களுடன் தொடர்புகொள்வதற்காக: உங்கள் ஆர்டர்கள், சேவைகள், புதுப்பிப்புகள் மற்றும் விளம்பரச் சலுகைகள் தொடர்பாக (நீங்கள் ஒப்புதல் தெரிவித்திருந்தால்).
d) எங்கள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்த: தரவு பகுப்பாய்வு, ஆராய்ச்சி மற்றும் கருத்துக்களின் மூலம்.
e) சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நடவடிக்கைகளுக்காக: உங்கள் விருப்பங்களின் அடிப்படையில், உங்களுக்குப் பொருத்தமான சலுகைகள், செய்திமடல்கள் மற்றும் புதிய தயாரிப்புகள் அல்லது சேவைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்புவதற்காக.
f) சட்ட மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த பொறுப்புகளுடன் இணங்குவதற்கு: வரி, தணிக்கை மற்றும் அறிக்கை சமர்ப்பிப்புத் தேவைகள் உட்பட.
g) உள் வணிகச் செயல்பாடுகளுக்காக: மனிதவள மேலாண்மை, கணக்கியல் மற்றும் ஆபத்து மேலாண்மை போன்றவை.
h) மோசடி, பாதுகாப்பு மீறல்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டறிந்து தடுப்பதற்கு.
 

6. செயலாக்கத்திற்கு சட்டப்பூர்வமான அடிப்படை
 

பின்வரும் சட்டப்பூர்வமான அடிப்படைகள் இருக்கும்போது மட்டுமே நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவுகளைச் செயலாக்குவோம், அவை:
 

a) ஒப்புதல்: ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உங்கள் தனிப்பட்ட தரவுகளைச் செயலாக்குவதற்கு எங்களுக்கு நீங்கள் தெளிவான ஒப்புதல் அளித்திருக்கும் பட்சத்தில்.
b) ஒப்பந்தத் தேவை: உங்களுடனான ஒரு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கு அல்லது ஒப்பந்தத்தில் நுழைவதற்கு முன்பு உங்கள் கோரிக்கையின் பேரில் நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தரவுச் செயலாக்கம் அவசியமாக இருக்கும்போது.
c) சட்டப்பூர்வமான பொறுப்பு: EFL கட்டுப்பட்டிருக்கும் ஒரு சட்டப்பூர்வமான பொறுப்புடன் இணங்க தரவுச் செயலாக்கம் அவசியமாக இருக்கும் பட்சத்தில்.
d) சட்டப்பூர்வமான நலன்கள்: EFL அல்லது ஒரு மூன்றாம் தரப்பினரால் அடையப்படும் சட்டப்பூர்வமான நலன்களின் நோக்கங்களுக்காக உங்கள் நலன்கள் அல்லது அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களால் அத்தகைய நலன்கள் மீறப்படும் சூழ்நிலைகளைத் தவிர, தரவுச் செயலாக்கம் அவசியமாக இருக்கும் பட்சத்தில்.
 

7. தனிப்பட்ட தரவுகளை வெளிப்படுத்துதல்
 

உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் பின்வருபவர்களுடன் பகிரலாம்:
 

a) எங்கள் துணை நிறுவனங்கள் மற்றும் குழும நிறுவனங்கள்: உள் நிர்வாக நோக்கங்களுக்காகவும், ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குவதற்காகவும்.
b) சேவை வழங்குநர்கள் மற்றும் வணிகப் பங்காளிகள்: எங்கள் சார்பாக சேவைகளை வழங்கும் தரப்பினர்கள் (உதாரணமாக, கட்டணச் செயலாக்க நிறுவனங்கள், தளவாடப் பங்காளிகள், தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள், சந்தைப்படுத்தல் முகமைகள்). இந்த மூன்றாம் தரப்பினர் உங்கள் தரவுகளைப் பாதுகாக்க மற்றும் அது வெளியிடப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே அதைப் பயன்படுத்த ஒப்பந்தப்படி கடமைப்பட்டுள்ளனர்.
c) அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள்: சட்டம், நீதிமன்ற உத்தரவு அல்லது சட்டப்பூர்வ செயல்முறைகளுக்கு இணங்குவதற்காகத் தேவைப்படும்போது.
d) ஒரு இணைப்பு, கையகப்படுத்தல் அல்லது சொத்து விற்பனை ஏற்படும் பட்சத்தில்: உங்கள் தனிப்பட்ட தரவுகள் கையகப்படுத்தும் நிறுவனத்திற்கு மாற்றப்படலாம்.
 

உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் யாருடன் பகிர்ந்துகொள்கிறோமோ, அந்த மூன்றாம் தரப்பினர் அனைவரும் இந்த தனியுரிமைக் கொள்கைக்கும் DPDP சட்டத்திற்கும் இணக்கமான தரவுப் பாதுகாப்பு வழங்குவதை நாங்கள் உறுதி செய்வோம்.
 

8. சர்வதேச தரவுப் பரிமாற்றங்கள்
 

உங்கள் தனிப்பட்ட தரவு இந்தியாவின் வெளியே உள்ள ஒரு இடத்திற்கு மாற்றப்படலாம் மற்றும் அங்கு சேமிக்கப்படலாம். இதுபோன்ற பரிமாற்றங்கள் ஏற்படும் போது, DPDP சட்டத்தின்படி உங்கள் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கத் தேவையான பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.
 

9. தரவுப் பாதுகாப்பு
 

உங்கள் தனிப்பட்ட தரவுகளை அங்கீகரிக்கப்படாத அணுகல், மாற்றம், வெளிப்படுத்தல் அல்லது அழிவிலிருந்து பாதுகாக்க நாங்கள் வலுவான தொழில்நுட்ப மற்றும் நிறுவன ரீதியான நடவடிக்கைகளைச் செயல்படுத்துகிறோம். இந்த நடவடிக்கைகளில் அடங்குபவை:
 

a) குறியாக்கம்: பரிமாற்றத்தில் உள்ள மற்றும் சேமிப்பில் உள்ள தரவுகளுக்கு, தேவைப்படும் இடங்களில்.
b) அணுகல் கட்டுப்பாடுகள்: தனிப்பட்ட தரவுகளை அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே அணுக அனுமதிப்பது.
c) வழக்கமான பாதுகாப்புத் தணிக்கைகள்: பாதிப்புகளைக் கண்டறிந்து சரிசெய்வதற்காக.
d) பணியாளர் பயிற்சி: தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பான சிறந்த நடைமுறைகள் குறித்து.
e) சம்பவத்திற்குப் பதிலளிக்கும் திட்டம்: ஏற்படக்கூடிய தரவு மீறல்கள் எதையும் உடனடியாக சரி செய்வதற்காக.
 

10. தரவு உரிமையாளர்/வாடிக்கையாளராக உங்கள் உரிமைகள்
 

DPDP சட்டத்தின் கீழ், உங்கள் தனிப்பட்ட தரவு தொடர்பாக உங்களுக்கு பின்வரும் உரிமைகள் உள்ளன:
 

a) தகவல்களை அணுகும் உரிமை: உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவுகள் செயலாக்கப்படுகிறதா இல்லையா என்பது குறித்து எங்களிடமிருந்து உறுதிப்படுத்தலைப் பெறுவதற்கும், அவ்வாறு செயலாக்கப்பட்டால், அந்தத் தனிப்பட்ட தரவுகளை அணுகுவதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது.
b) திருத்தம் மற்றும் நீக்குவதற்கான உரிமை: தவறான அல்லது தவறாக வழிநடத்தும் தனிப்பட்ட தரவுகளைத் திருத்தவும், சேகரிக்கப்பட்ட நோக்கத்திற்காக இனி தேவைப்படாத தனிப்பட்ட தரவுகளை அழிக்குமாறு கேட்டுக்கொள்ளவும் உங்களுக்கு உரிமை உள்ளது.
c) குறைகளுக்கு தீர்வு காணும் உரிமை: எங்கள் மூலம் உங்கள் குறைகளுக்கு தீர்வு காண உங்களுக்கு உரிமை உள்ளது.
d) பரிந்துரைக்கும் உரிமை: உங்களுக்கு மரணம் அல்லது இயலாமை ஏற்படும் பட்சத்தில் உங்கள் உரிமைகளைச் செயல்படுத்த மற்றொருவரைப் பரிந்துரைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது.
 

இந்த உரிமைகளில் எதையும் பயன்படுத்த, கீழே வழங்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி எங்கள் தரவுப் பாதுகாப்பு அதிகாரியைத் தொடர்பு கொள்ளவும். பொருந்தக்கூடிய சட்டத்தின்படி உங்கள் கோரிக்கைக்கு நாங்கள் பதிலளிப்போம்.


11. தரவு தக்கவைப்பு
 

உங்கள் தனிப்பட்ட தரவுகளை எந்தவொரு சட்டப்பூர்வமான, கணக்கியல் அல்லது அறிக்கை சமர்ப்பிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வது உட்பட, அது சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான தேவையான காலம் வரை மட்டுமே நாங்கள் தக்கவைத்துக்கொள்வோம்.
 

12. குழந்தைகளின் தனியுரிமை
 

எங்கள் தயாரிப்புகளும் சேவைகளும் 18 வயதுக்குட்பட்டவர்களை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் குழந்தைகளிடமிருந்து தனிப்பட்ட தரவுகளை நாங்கள் தெரிந்தே சேகரிப்பதில்லை. முறையான ஒப்புதல் இல்லாமல் ஒரு குழந்தையிடமிருந்து தனிப்பட்ட தரவுகளை நாங்கள் சேகரித்துவிட்டோம் என்று எங்களுக்குத் தெரிந்தால், அத்தகைய தகவல்களை நீக்க நடவடிக்கை எடுப்போம்.
 

13. இந்த தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்கள்
 

எங்கள் நடைமுறைகள் அல்லது சட்டத் தேவைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த தனியுரிமைக் கொள்கையை நாங்கள் அவ்வப்போது புதுப்பிக்கலாம். முக்கியமான மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டால், புதுப்பிக்கப்பட்ட கொள்கையை எங்கள் இணையதளத்தில் வெளியிடுவதன் மூலமாகவோ அல்லது பிற பொருத்தமான தொடர்பு வழிகள் மூலமாகவோ நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம். இந்த தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யுமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.
 

14. எங்களைத் தொடர்பு கொள்ளவும்
 

இந்த தனியுரிமைக் கொள்கை அல்லது எங்கள் தரவுப் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், அல்லது உங்கள் உரிமைகளைச் செயல்படுத்த விரும்பினால், தயவுசெய்து எங்கள் தரவுப் பாதுகாப்பு அதிகாரியைத் தொடர்பு கொள்ளவும்:
 

தரவுப் பாதுகாப்பு அதிகாரி: யுரேகா ஃபோர்ப்ஸ் லிமிடெட்
 

dpo@eurekaforbes.com
B1/B2, 701, 7வது மாடி, மராத்தான் இன்னோவா,
கன்பத்ராவ் கடம் மார்க் அருகில்,
லோயர் பரேல் (மேற்கு), மும்பை,
மகாராஷ்டிரா - 400013
________________________________________
________________________________________

 

 

WhatsappButton